12 வயது சிறுமியை பெற்றோர்களே பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய கொடூரம்

12 வயது சிறுமியை பெற்றோர்களே பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய கொடூரம்


கேரள மாநிலம் மலப்புரத்தில் 7வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு பள்ளியின் மூலம் மனநல ஆலோசனை அளிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில் அச்சிறுமி கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அச்சிறுமிக்கு மனநல ஆலோசனை அளித்தவர் ‘டைமஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில்,“இந்தச் சிறுமி என்னிடம் கூறியது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை 10 வயது முதல் அவரது குடும்பத்தினர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. முதலாக அந்தச் சிறுமியை அவரது தந்தையின் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதற்கு அவர் அக்குடும்பத்தினருக்கு பணம் அளித்துள்ளார். இதன்பின்னர் அச்சிறுமியை 30 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதற்கு அவரது குடும்பத்தினர் வறுமைதான் காரணம் என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.

ஏனென்றால் அவரது தந்தைக்கு வேலை இல்லாததால் குடும்பம் பெரும் வறுமையில் இருந்தது. இதனால் அவரது தந்தை முதலில் சிறுமியின் தாயை பாலியல் தொழிக்கு தள்ள முற்பட்டுள்ளார். அதற்குப் பிறகு இந்தச் சிறுமியையும் அவர் பாலியல் வன்கொடுமைக்கு பயன்படுத்தியுள்ளார்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த மனநல ஆலோசகர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் அச்சிறுமியிடம் வாக்குமூலத்தை பெற்றனர். அத்துடன் அச்சிறுமியின் தந்தை மற்றும் இருவரையும் கைது செய்தனர். கைதான இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழுக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சிறுமியின் தந்தை மீது சிறார் நீதி சட்டத்தின் (Juvenile Justice Act) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சிறுமியை காவல்துறையினர் காப்பகத்திற்கு அழைத்து சென்று விட்டனர்.

இதுதொடர்பாக அச்சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒருவர்,“தினமும் இரவு அச்சிறுமியின் அழுகை சத்தம் கேட்கும். நாங்கள் அது குடும்ப தகராறாக இருக்கும் என்று நினைத்து அதில் தலையிட்டத்தில்லை” எனத் தெரிவித்தார். இந்தச் சிறுமியின் வீட்டில் எதுவும் சரியாக இல்லை என்று அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் சிறுமியின் பள்ளிக்கூடத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதன்பிறகு தான் அச்சிறுமிக்கு மனநல ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அச்சிறுமியின் தாய், “இது முழுக்க பொய். எனக்கு என்னுடைய மகள் திரும்ப வேண்டும்” எனக் கூறியுள்ளார். இச்சிறுமி காப்பகத்திற்கு செல்லும் முன்னர் தனது வீட்டின் கதவில் “என்னை மன்னித்து விடுங்கள் அம்மா” என எழுதிவிட்டு சென்றுள்ளார். 12 வயது சிறுமி ஒருவர் 30 ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய தலைமுறை
Leave a Reply

%d bloggers like this: