12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை 19ஆம் தேதி இந்த வெப்சைட்டுகளில் பார்க்கலாம்.

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை 19ஆம் தேதி இந்த வெப்சைட்டுகளில் பார்க்கலாம்.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று முடிந்த 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் அதாவது 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

நடப்பு கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில், 10ம் வகுப்புக்கு மார்ச் 14 முதல் 29ம் தேதி வரையிலும், 12ம் வகுப்புக்கு மார்ச் 1 முதல் 19ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, 10 மற்றும் 12ம் வகுப்பு பொத்தேர்வுகளின் முடிவுகள் வரும் 29 மற்றும் 19 தேதிகளில் வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களான

http://tnresults.nic.in/

http://www.dge.tn.nic.in/ 

ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதோடல்லாமல் மாணவர்கள் ஏற்கனவே சமர்ப்பித்த மொபைல் எண்ணுக்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். அது போல மதிப்பெண் மறு கூட்டலுக்கு ஏப்ரல் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

153total visits,1visits today




Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: