[the_ad id=”7332″]
12-ம் வகுப்பு தேர்ச்சியானவர்களுக்கு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வேலை!
சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.ரூ.35 ஆயிரம் வரையிலும் ஊதியம் வழங்கப்பட உள்ள இப்பணியிடத்திற்கு 12-வது தேர்ச்சிபெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.
நிர்வாகம் : செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 09
பணி:- செயலாளர் துணை நூலகர் ஸ்டெனோ கிரேடு II யு.டி.சி எல்.டி.சி அலுவலக கண்காணிப்பாளர்
கல்வித்தகுதி:-
செயலாளர் : 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வேகமாகக் குறிப்பெழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
துணை நூலகர் : இளநிலை நூலகர் பட்டப்படிப்பு, கணினி பயன்பாட்டில் தேர்ச்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஸ்டெனோ கிரேடு II : 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வேகமாகக் குறிப்பெழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
யு.டி.சி : ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
எல்.டி.சி. : 12ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்து ஆங்கிலத்தில் வேகமாகத் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக கண்காணிப்பாளர் : மத்திய மாநில அரசுகளின் கணக்குப்பதிவு துறையில் 5 முதல் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:- செயலாளர், துணை நூலகர், ஸ்டெனோ கிரேடு II, யு.டி.சி, எல்.டி.சி. உள்ளிட்ட பணியிடங்களுக்கு 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அலுவலக கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம்:- செயலாளர், துணை நூலகர், ஸ்டெனோ கிரேடு II, யு.டி.சி உள்ளிட்ட பணியிடங்களுக்கு ரூ.9,300 முதல் ரூ.34,800 வரையில் எல்.டி.சி. பணியிடத்திற்கு ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையில் அலுவலக கண்காணிப்பாளர் – ரூ.9,300 முதல் ரூ.34,800 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் http://www.cict.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையத்தில் விண்ணப்பத்தினைப் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தைத் தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், நூறடி சாலை, தரமணி, சென்னை – 600 013
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2019 ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.cict.in/pdf/Non-Academic%20Posts.pdf என்னும் அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
[the_ad id=”7250″]
[the_ad id=”7252″]
You must log in to post a comment.