பெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 1,09,382 லட்சம் பேர் பயன்

Hits: 6

பெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 1,09,382 லட்சம் பேர் பயன்


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 108 அவசர ஊர்தி சேவை ஊழியர்களுக்கு மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இச்சேவையின் குறை, நிறைகளை கேட்கப்பட்டு அதற்கான தீர்வுகள் மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் இச்சேவை மேம்பாட்டிற்காக இக்கூட்டத்தில் இச்சேவையின் குறை நிறைகள் கேட்கப்பட்டு அதற்கான தீர்வுகள் மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் இச்சேவை மேம்பாட்டுக்கான ஜிபிஎஸ் கண்காணிப்பின் மூலம் ஆம்புலன்ஸ் அறிந்து சம்பவ இடத்திற்கு செல்லக் கூடிய ஜிபிஎஸ் சிஸ்டம் கையாளும் முறைகள் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்பொழுது சேவையின் மாவட்ட மேலாளர் உதயநிதி தெரிவித்தது: பெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை 2008ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. தற்போது 13 ஆம்புலன்சுகள் இயங்கி வருகின்றன. இதில் கடந்த ஏப்ரல் மாதம் வரை மொத்தம் 1,09,382 லட்சம் நபர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதில் பிரசவத்திற்காக தாய்மார்கள் 24,319 பேரும், சாலைவிபத்தில் சிக்கியவர்கள் 19,300 நபர்களும், பிற பல்வேறு அவசர மருத்துவ தேவைகளுக்காக 65,763 நபர்களும் அடங்குவர்.

108 ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 11 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான விலைமதிப்பற்ற உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளது. இச்சேவை முற்றிலும் இலவச சேவை என்பதால் பொதுமக்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது. அனைத்து ஆம்புலன்சுகளுக்கும் ஆண்ட்ராய்டு மொபைல் வழங்கப்பட்டு ஆம்புலன்ஸ் செயல்பாடுகள ஜிபிஎஸ் கருவி மூலம் கண்கணிக்கப்படுவதால் துரிதமாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவமுடியும். மேலும் அவசர முதலுதவி தேவைக்கான அனைத்து மருந்து மற்றும் உபகரணங்களும் ஆம்புலன்ஸில் இருப்பதனால் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் தக்க முதலுதவி கொடுக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர் என்றார்.

தினகரன்




Leave a Reply