102 ஆண்டுகளில் இல்லாத மழை செப்டம்பரில் பெய்துள்ளது.

102 ஆண்டுகளில் இல்லாத மழை செப்டம்பரில் பெய்துள்ளது.


இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், கடந்த 102 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் சராசரியாக 247.1 மி.மீ., மழை பெய்துள்ளது. இது வழக்கமாக பெய்யும் மழை அளவை விட 48 சதவீதம் அதிகம். அத்துடன் 1901ம் ஆண்டிற்கு பிறகு அதிக அளவில் பதிவான 3வது மழை அளவும் இதுவே ஆகும்.

செப்.,30ல் இந்த மழை அளவான 1983ல் பதிவான 255.8 மி.மீ.,மழை அளவை கடக்கும் எனவும், குஜராத் மற்றும் பீகாரில் மிக அதிக கனமழை பெய்யும் எனவும், இந்த மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பருவமழை தாமதமாக துவங்கியதால் ஜூன் மாதத்தில் மழை அளவு 33 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் கடந்த 4 மாதங்களில் மட்டும், 25 ஆண்டுகளில் பெய்த மழை அளவை விட அதிக மழை பெய்துள்ளது.

கடந்த 4 மாதங்களில் 956.1 மி.மீ., மழை பெய்துள்ளது. அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு கனமழை குறைவதற்கான வாய்ப்பில்லை என்பதால் மழை அளவு மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
Leave a Reply

%d bloggers like this: