2019-2020 கல்வியாண்டிற்கான 10,11 மற்றும் 12-க்கான பொதுத்தேர்வு அட்டவணை!

401

[the_ad id=”7332″]

2019-2020 கல்வியாண்டிற்கான 10,11 மற்றும் 12-க்கான பொதுத்தேர்வு அட்டவணை!

தமிழகத்தில் இந்த கல்வியாண்டிற்கான 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச்/ஏப்ரல் 2020-ல் நடைபெறவுள்ள அரசுப் பொதுத் தேர்வுகளான இடைநிலைப் பொதுத்தேர்வு (பத்தாம் வகுப்பு), மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு (பதினொன்றாம் வகுப்பு) மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு (பன்னிரண்டாம் வகுப்பு) ஆகியவற்றிற்கான கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படுகிறது.

அனைத்து மாணவர்களும் எவ்வித மன அழுத்தமுமின்றி தேர்வெழுதுவதற்கு ஆசிரியர்கள் முன்னதாகவே மாணவர்களை தயார் செய்யும் வகையில் பின்வருமாறு அறிவிக்கப்படுகிறது.[the_ad id=”7251″]

[wp_table id=8535/]

பத்தாம் வகுப்பு: 
பத்தாம் வகுப்புக்கு அடுத்த வருடம் மார்ச் 17ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி, ஏப்ரல் 9ம் தேதி முடிவடைகிறது. மார்ச் 17ம் தேதி முதல் 30ம் தேதி வரையில் மொழி பாடங்களும், அதன்பிறகு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத் தேர்வுகளும் நடைபெறுகிறது.

பதினொன்றாம் வகுப்பு: 
பிளஸ் 1 மாணவர்களுக்கு அடுத்த வருடம் மார்ச் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. பின்னர், 11ம் தேதி முதல் 26ம் தேதி வரையில் அறிவியல், வணிகம், உயிரியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கான தேர்வுகள் நடைபெறுகிறது.

பன்னிரெண்டாம் வகுப்பு: 
இதே போல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வருடம் மார்ச் 2ம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது. 2, 5 ஆகிய தேதிகளில் மொழி பாடங்களுக்கான தேர்வும், அதைத் தொடர்ந்து பிற பாடங்களுக்கான தேர்வும் நடைபெறுகிறது. இது பற்றிய முழுமையான விபரங்களை அரசுத்தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். https://drive.google.com/file/d/1cB8wI73qDUsUOonPM8GaHbb8U2aMawIA/view


[the_ad id=”7250″]


[the_ad id=”7252″]
%d bloggers like this: