பிளஸ் 2 செய்முறைத் தேர்வுக்கு பிறகு 10 நாள் விடுமுறையா? 10 days leave after Plus 2 practical exam
மே 3ஆம் தேதி தொடங்கும் வகையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது. இதையொட்டி மாணவர்கள் தீவிரமாக தயாராகி வந்தனர். இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 9 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கிடையில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு பள்ளிகளை மீண்டும் மூடும் நிலைக்கு தள்ளியது.
எனவே 12ஆம் வகுப்பைத் தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்த படியே கல்வி கற்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுவதால் வாக்குப்பதிவிற்கு வசதியாக தேர்தல் ஆணையத்திடம் பள்ளிகள் ஒப்படைக்கப்பட்டன. இதன் காரணமாக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்த பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு செய்முறைத் தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பிற்கு செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதையடுத்து தொடர்ந்து 10 நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு 12ஆம் வகுப்பிற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Keywords: Plus 2 practical exam, Practical exam,
You must log in to post a comment.