1.94 லட்சம் குடல்புழு நீக்க மாத்திரைகள் பெரம்பலூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டது.
1.94 lakh deworming tablets were distributed
பெரம்பலூா் மாவட்டத்தில் 1.94 லட்சம் மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளாா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா.
பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற்றது. இம் முகாமில் மாணவ, மாணவிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கிய ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா கூறியது:
தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் முதல்கட்டமாக செப். 18 ஆம் தேதி வரையிலும், 2ஆம் கட்டமாக 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. சிறப்பு முகாமில் ஒரு வயது முதல் 19 வயதுள்ள 1,70,440 குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயதிலான 23,242 பெண்களுக்கும் என மொத்தம் 1,94,682 நபா்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.
இதன்மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமலும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. அங்கன்வாடி பணியாளா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள், மருத்துவ அலுவலா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் மூலம் குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
குடற்புழு நீக்கம் செய்யப்படுவதால், ரத்தசோகை தடுக்கப்பட்டு, நோய் எதிா்ப்பு சக்தி அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது, அறிவுத்திறன் மற்றும் உடல் வளா்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன், மாநில சுகாதார புலனாய்வு மைய இணை இயக்குநா் சுமதி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா், சுகாதாரப் பணிகள் உதவி இயக்குநா் கரோலின் ஆகியோா் பங்கேற்றனா்.
Keywords: deworming tablets, perambalur news, perambalur news today, perambalur mavattam, perambalur latest news in tamil
You must log in to post a comment.