ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது.

Hits: 92

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மோட்டார் வாகனச் சட்டத்தின் படி தலைக்கவசம் அணியாதவர்களுக்கு தற்போது விதிக்கப்படும் அபராத தொகையான ரு. 100 லிருந்து, ரூ. 1000 வரை உயர்ந்தப்பட்டுள்ளது. விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும்  என்று போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையினர் வெளிட்டுள்ள அறிக்கையில்:

சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாகவே உள்ளனர்.  இவற்றில் 90% இளைஞர்கள் தலைக்கவசம் அணியாததால் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தலைக்கவசம் அணிந்து செல்லும் போது, chain strap சரிவர அணியாமல் செல்கின்றனர். அதேபோன்று பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது, தலைக்கவசம் அணிய வேண்டாம் என்ரு கருதுகிறார்கள். அது தவறானது விபத்து எப்போது நடக்கும் என்று தெரியாது அதனால் தலைக்கவசம் அணிய வேண்டும். பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

மேலும் கைப்பேசியை மறவாமல் கொண்டுச்செல்வது போல் ஹெல்மெட்டையும்  எடுத்துச்செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினர்.






Leave a Reply