அபுதாபியில் ஹாஜிகள் வழியனுப்பு விழா!

அபுதாபியில் ஹாஜிகள் வழியனுப்பு விழா!


இந்த வருடம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் அய்மான் சங்க மார்க்கத்துறை செயலாளர் மௌலவி ஹுஸைன் மக்கி மஹ்லரி, மற்றும் அபுதாபியில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் தமிழக ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா மற்றும் ஹஜ் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பு மற்றம் வழியனுப்பு விழாவினை அய்மான் சங்கம் சார்பில் 06/07/2019 சனிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பின் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்றது.

அய்மான் சங்க மார்க்கத்துறை செயலாளர் மௌலவி ஹுஸைன் மக்கி மஹ்லரி அவர்கள் ஹஜ் விளக்கவுரை நிகழ்த்தினார்.

புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளுக்கு அய்மான் நிர்வாகிகள் சால்வை அணிவித்து கவுரவித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.Leave a Reply

%d bloggers like this: