பெண்களுக்கு ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்கை போக்க டிப்ஸ்.

பெண்களுக்கு ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்கை போக்க டிப்ஸ்.

பெண்களுக்கு குழந்தை பிறகு அதிகரித்த எடையைக் குறைப்பதிலும், வயிறு பெரிதானதால் ஏற்பட்ட தழும்புகளைப் போக்கவும் சில குறிப்புகளை பார்ப்போம்.

வலிமிகுந்த பிரசவத்துக்குப் பின் பெரிதான வயிறு மீண்டும் பழைய நிலைக்குச் சுருங்கும்போது, விரிவடைந்த சருமத்தில் வரி வரியாக  காணப்படும் தழும்புகளே ஸ்ட்ரெச் மார்க். கர்ப்பிணிகள், உடல் எடையைத் திடீரென்று குறைத்தவர்கள், இளம் வயதில் கருவுற்றவர்கள், பாடி  பில்டிங்கில் ஈடுபட்டு உடல் எடையைக் குறைத்தவர்கள், சீரற்ற ஹார்மோன் இயக்கங்களைக் கொண்டவர்களுக்கும் மரபியல் காரணங்களால்  ஸ்ட்ரெச் மார்க் வரலாம்.

சருமத்தில் கொலாஜன், எலாஸ்டின் என்ற புரதங்கள் உள்ளன. இவைத் தான் சருமத்தை பாதுகாக்கின்றன. வயிறு விரிவடைந்து மீண்டும் சுருங்கும்போது, டெர்மிஸ் படிமம் உடைக்கப்படுவதால் ஸ்ட்ரெச் மார்க் விழுகிறது.

குழந்தை பெர்று பால் கொடுக்கும் சமயத்திலும், இந்த கிரீம்களைப் பூசக் கூடாது. சுயமாக எந்த கிரீம்களையும் வாங்கிப் பூசக் கூடாது. ஏனெனில், சில கிரீம்களில் ஸ்டீராய்டு கலந்திருப்பதால், அது கருவுற்ற சமயத்தில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

பிரசவமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிரமில்லாத பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். நடைப்பயிற்சி, ட்ரெட் மில் போன்ற எளிய  பயிற்களில் ஈடுபடலாம்.

கருவுற்றிருக்கும்போது மருத்துவரின் ஆலோசனையின் பேரில், அவர் பரிந்துரைக்கும் மாய்ஸ்சரைசர் கிரீம் பூசலாம். மேலும் பிரசவத்துக்குப் பிறகு ஃபிட்னெஸ் பயிற்சி செய்தாலே, 50 சதவிகிதத் தழும்புகள் மறையும்.

குழந்தை பெற்ற பிறகு தழும்பு விழுந்தாலும் அது வெறும் பத்து சதவிகிதத் தழும்பாக மட்டுமே இருக்கும். அது காலப்போக்கில் கிரீம்களாலும், பயிற்சி செய்வதாலும் மறைந்துவிடும்.

4total visits,2visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: