புதிய செய்தி :

ஸ்டெர்லைட் எதிர்ப்பு: பெரம்பலூரில் ஒருவர் தர்னா

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூரில் ஒருவர் தர்னா போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டார்.

பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் ராமச்சந்திரன் (33). இவர், புதிய பாதை எனும் அமைப்பை செயல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், எளம்பலூர் ஊராட்சி அலுவலகம் எதிரே அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அறவழிப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டார்.

தகவலறிந்த பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட ராமச்சந்திரனிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு சென்றார்.
Leave a Reply