ஷிந்தகா சுரங்கப்பாதை நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது.

819

ஷிந்தகா சுரங்கப்பாதை நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது.


Gulf News: The Dubai Al Shindagha Tunnel will be temporarily closed tomorrow.


ஷிந்தகா சுரங்கப்பாதைதேராவை, பர்துபாயுடன் இணைக்கும் அல் ஷிந்தகா சுரங்கப்பாதை நாளை (சனிக்கிழமை) காலை 12.30 (AM) முதல் காலை 8 மணி வரையிலும் மூடப்படும் என துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தமது அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இன்றும் இதே சுரங்கப்பாதை காலை 12.30 (AM) முதல் காலை 10.30 மணி வரையிலும் மூடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிந்தகா சுரங்கப்பாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள், நாளை காலை 12.30 முதல் காலை 8.30 மணி வரை அல் மக்தூம் மேம்பாலம் அல்லது கர்ஹூத் மேம்பாலத்தை  பயன்படுத்துமாறு RTA அறிவுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக குறிப்பிட்ட சில வழித்தட பேருந்துகளின் இயக்கம் தாமதமாகலாம் என போக்குவரத்து ஆணையம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. X13, X02, 8, 95, C01, C03, C07, C09, C18, E306 மற்றும் X23 ஆகிய வழித்தட பேருந்துகள் இயக்கம் இதனால் தாமதமடையலாம்.

Keywords: gulf news, daily gulf news, gcc news tamil, gulf news tamil,
%d bloggers like this: