வைட்டமின்கள் நிறைந்த பீக்கங்காய்!

வைட்டமின்கள் நிறைந்த பீக்கங்காய்!


பீர்கங்காய் நமது ஊரில் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு காய் வகை. இதில் உள்ள வைட்டமின்கள் நமது உடலுக்கு என்ன என்ன நன்மைகைள் கிடைக்கிறது என்பதை இதில் பார்ப்போம்.


இதில் உள்ள நார்ச்சத்து, ஏ, பி, சி வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம்.


பீர்கங்காய் சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும். சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் போதும்; இரண்டு மூன்று  கட்டுகளிலேயே குணமாகிவிடும். பற்றாகவும் இடலாம்.

கொய்யாப்பழம் உண்டால் பார்வைத் திறன் கூடும்!
இயற்கையோடு இயற்கையாக இப்படி ஒரு வீடு கட்டினா எப்படி இருக்கும்!

பீர்கங்காயில் நீரிழிவு நோயாளிகளுக்கும், குண்டான மனிதர்களுக்கும் கெடுதல் செய்யாத காய்கறியாகவும் திகழ்கிறது.முற்றிய பீர்க்கனில் லுஃபின் என்னும் கசப்புப் பொருள் இருக்கிறது. பீர்க்கனின் விதைகளில் ஒரு விதமான நறுமண எண்ணெய் இருக்கிறது. நார்ச்சத்தும்  உடனடியாக இரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடிய மாவுச்சத்தும் பீர்க்கனில் உள்ள முக்கிய சிறப்பு அம்சங்களாகும்.


பீர்க்கன் இலையைச் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் சூடுபடுத்தி, அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம்  சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.


சிறு குழந்தைகளின் கண்நோய் நீங்க இதே இலைச்சாற்றில் ஓரிரு சொட்டுக்கள் கண்ணில் விட்டால் போதும். ஆனால், அந்த இலைச்சாற்றை  சூடுபடுத்தக்கூடாது.


கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும் அடிக்கடி பீர்க்கன் காயையும் சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள். தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைந்து குணமாகும்.

157total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: