பெரம்பலூரில் நாளை நடக்கும் வேலைவாய்ப்பு முகாமிற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

பெரம்பலூரில் நாளை நடக்கும் வேலைவாய்ப்பு முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நமது மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் பயனடையும் வகையில் பல்வேறு தனியார் துறையினரால் வேலைவாய்ப்பகத்தின் மூலம் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் சென்னை டி.வி.எஸ் நிறுவனம், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலைக்கு ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களும், சீனிவாசன் அசோஸியேசன் நிறுவனத்துக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்று பயன் பெறலாம்.

எனவே கல்வித் தகுதியும், வேலை செய்ய விருப்பமும் உள்ளவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில்  நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.

இதைப் பார்த்தவர்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: