பெரம்பலூரில் வரும் 21-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்.

பெரம்பலூரில் வரும் 21-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்.பெரம்பலூரில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 21 ஆம் தேதி ரோவர் பள்ளி வளாகத்தில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 8 ஆம் வகுப்பு முதல் பி.இ. முடித்தவர்கள் வரை தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும், பெரம்பலூரில் உள்ள உள்ளுர் நிறுவனங்களும் தங்களுக்குத் தேவையான மற்றும் தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க விருப்பம் உள்ளவர்கள், தங்களது நிறுவனத்தின் பெயர், காலிப்பணியிடங்கள், பணியின் பெயர், சம்பளம், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை 04328-225352 என்னும் எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.

தினமணி


மேலும் மாவட்ட செய்திகள் வாசிக்க – பெரம்பலூர் மாவட்ட செய்திகள்


Leave a Reply

%d bloggers like this: