நாளை பெரம்பலூரில் வேலைவாய்ப்பு முகாம்

Hits: 8

நாளை பெரம்பலூரில் வேலைவாய்ப்பு முகாம்


பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 31) நடைபெற உள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை, அவர்களது நிர்வாகிகளைக் கொண்டு அல்லது நேரில் வந்து தேர்வு செய்துகொள்ளலாம்.

இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

இம்முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் பணியிடம் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடத்துக்கும், மகேந்திரா நிறுவனத்துக்கு ஐ.டி.ஐ டீசல் மெக்கானிக், மோட்டார் வாகனம் படித்தவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். முகாம் காலை 10 மணிக்கு நடைபெறும்

தினமணி
Leave a Reply