5 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

வேப்பந்தட்டை அருகே டிராக்டர் திருடிய குற்றத்திற்காக சிறுவன் உள்பட 2 பேர் கைது.

482

வேப்பந்தட்டை அருகே டிராக்டர் திருடிய குற்றத்திற்காக சிறுவன் உள்பட 2 பேர் கைது. Two arrested for tractor theft

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியவடகரையை சேர்ந்தவர் முத்துசாமி(வயது 35). விவசாயி. இவரது வீட்டு வாசலில் நேற்று முன்தினம் இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் திருட்டு போனது. இது குறித்து முத்துசாமி, கை.களத்தூர் போலீசில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார், அது பற்றி மற்ற போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை பெரம்பலூரில் வந்த ஒரு டிராக்டரை போலீசார் மறித்து நிறுத்தி, அதில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் பெரிய வடகரையை சேர்ந்த கமுருதீன்(வயது 28) மற்றும் 14 வயது சிறுவன் என்பதும், அந்த டிராக்டர் பெரிய வடகரையில் இருந்து திருடி வரப்பட்டதும், தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, டிராக்டரை மீட்டு கை.களத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

keywords: Two arrested, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்.
%d bloggers like this: