பெரம்பலூரில் வேன் ஓட்டுநரை தாக்கிய ஓட்டல் தொழிலாளி கைது.
பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கணவாய் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் மணிகண்டன் (வயது 31). வேன் டிரைவர். குன்னம் தாலுகா பீல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை(51). இவர்கள் 2 பேரும் பெரம்பலூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு ஓட்டலுக்குள் அமர்ந்து மணிகண்டனும், அண்ணாதுரையும் மது அருந்தினர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது அண்ணாதுரை சமையல் செய்ய பயன்படுத்தும் இரும்பு துடுப்பினை எடுத்து மணிகண்டனை பலமாக தாக்கினார். இதில் மணிகண்டனின் தலை, தோள்கள் உள்பட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. இதையடுத்து மணிகண்டனை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சுமார் 52 தையல்கள் போடப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மணிகண்டனின் மனைவி மெய்யாத்தாள் பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பெரம்பலூர் போலீசார், அண்ணாதுரை மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளை சிறையில் அடைத்தனர்.
keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.