பெரம்பலூர் பிரம்மபுரீசுவரர் கோயிலில் வெள்ளி ரிஷிப வாகன வெள்ளோட்டம்.

பெரம்பலூர் பிரம்மபுரீசுவரர் கோயிலில் வெள்ளி ரிஷிப வாகன வெள்ளோட்டம்.


பெரம்பலூர் அருள்மிகு அகிலாண்டேசுவரி உடனுறை பிரம்மபுரீசுவரர் கோயிலுக்கு, ரூ. 28 லட்சம் மதிப்பில் புதிதாக செய்யப்பட்ட வெள்ளி ரிஷிப வாகனத்தின் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் தொடங்கி கடை வீதிவழியாகச் சென்ற வெள்ளோட்டம் மீண்டும் கோயிலில் நிறைவடைந்தது.

தொடர்ந்து, காலை 10 மணிக்கு விநாயகர் பூஜை,  ஸ்நபன பூஜையும், அனைத்து மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது.
பிற்பகல்  1 மணிக்கு மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதலும், இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதி உலா வருதலும் நடைபெற்றது. இதில், தக்கார் டி. விஜயராணி, நிர்வாக அலுவலர் வை. மணி, முன்னாள் அறங்காவலர் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி


மேலும் மாவட்ட செய்திகள் வாசிக்க – பெரம்பலூர் மாவட்ட செய்திகள்Leave a Reply

%d bloggers like this: