வி.களத்தூர் அருகே ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு மீட்பு

வி.களத்தூர் அருகே ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு மீட்பு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே சனிக்கிழமை ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பைப் தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.

வேபப்ந்தட்டை வட்டம், அயன்பேரையூர் கிராமத்தில் அழகர் என்பவரது ஹாலோ பிளாக் தயாரிக்கும் இடத்தில், 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதையறிந்த அழகர், பெரம்பலூர் தீயணைப்புப் படை வீரர்களுக்கு தகவல் அளித்தார். பின்னர், அயன்பேரையூர் கிராமத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் அந்த மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து வெண்பாவூர் வனப்பகுதியில் விட்டனர்.

தினமணிLeave a Reply

%d bloggers like this: