வி.களத்தூர் சங்கமம் நடத்திய நட்புணர்வு வாலிபால் போட்டி

வி.களத்தூர் சங்கமம் நடத்திய நட்புணர்வு வாலிபால் போட்டி

ஒவ்வொரு வருடமும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் வி.களத்தூர் சங்கமம் நடைபெற்று வருகிறது. அதே போல இந்த 2019 வருடமும் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த அமீரகத்தில் வாழும் வி.களத்தூர் நண்பர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இந்த மாத இறுதியில் அதாவது வரும் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வி.களத்தூர் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இந்த சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சிறு சிறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது வழக்கம். இந்த வருடம் வாலிபால் போட்டியும் நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சங்கமம் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக விழா குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த வாலிபால் போட்டி பற்றி விபரங்களை சகோதரர் அப்துல் காதர் அவர்கள் கூறும்போது:-

வி.களத்தூர் சங்கமம் வருகிற 29 ந்தேதி நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு நமதூர் சகோதரர்கள் ஒன்றிணைத்து ராஸ் அல்கைமா யில் வாலிபால் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது.

இப்போட்டியில் ஆறு அணிகள் கலந்து கொண்டது. இவற்றை இரு அணிகளாக A மற்றும் B என பிரிக்கப்பட்டது.

“A” அணியில்

  1. தாருஸ்ஸலாம்
  2. ராசல்கைமா A
  3. ஹீரோ

“B” அணியில்

  1. ராசல்கைமா B
  2. அல் கூஸ் (al quoz)
  3. பிஸ்மில்லாஹ்

இவ்வாறாக பிரிக்கப்பட்ட அணிகள் ஒவ்வொரு அணியுடனும் இருமுறை மோதியது. இந்த சுற்றுகளில் வெற்றி பெற்று முதல் அரையிறுதியில் தாருஸ்ஸலாம் அணியுடன் அல் கூஸ்(Al quoz) அணி விளையாடியது. இதில் தாருஸ்ஸலாம் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.

இரண்டாம் அரையிறுதியில் ராசல்கைமா A மற்றும் ராசல் கைமா B அணிகள் விளையாடியது. இதில் ராசல்கைமா A அணி வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது.

மூன்றாம் இடத்திற்கான போட்டி அல் கூஸ்(Al quoz) அணியும் ராசல்கைமா B அணியும் விளையாடி ராசல்கைமா B அணி வெற்றி பெற்றது.

இறுதி போட்டியில் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-0 என்ற முன்னிலையில் முதல் பரிசை தாருஸ்ஸலாம் அணி கைப்பற்றியது. இரண்டாம் பரிசை ராசல்கைமா A அணிக்கு கிடைத்தது.

மூன்றாம் பரிசை ராசல்கைமா B அணிக்கு வழங்கப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சங்கமம் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

புகைப்படங்களை பார்க்க
Leave a Reply

%d bloggers like this: