வேப்பந்தட்டை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை.
வேப்பந்தட்டை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தழுதாழை கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 75). கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு எதுவும் செல்லவில்லை. இதனால் இவருக்கும், இவரது மனைவி சாந்திக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த வீரமுத்து, தழுதாழை இளங்காளியம்மன் கோவில் அருகே பருத்தி வயலுக்கு தெளிக்கப்படும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீரமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினத்தந்தி
You must log in to post a comment.