விஷம் குடித்த பெண் சாவு

வயிற்று வலி: விஷம் குடித்த பெண் சாவு.

405

வயிற்று வலி: விஷம் குடித்த பெண் சாவு.

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முகமது ஹனிபா. இவரது மனைவி சைதாபி (வயது 56). இவர் ஏற்கனவே வயிற்று வலிக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சம்பவத்தன்று ஏற்பட்ட வயிற்று வலியை தாங்கமுடியாமல், அவதிப்பட்ட சைதாபி பூச்சி மருந்தை(விஷம்) குடித்ததில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட குடும்பத்தினர் சைதாபியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சைதாபி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Our Facebook Page

Keywords: விஷம் குடித்த பெண் சாவு




%d bloggers like this: