விஷம் குடித்து தற்கொலை

வயிற்றுவலி காரணமாக விஷம் குடித்து பெண் தற்கொலை.

445

வயிற்றுவலி காரணமாக விஷம் குடித்து பெண் தற்கொலை.

வயிற்றுவலி காரணமாக விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி செந்தமிழ்ச்செல்வி(வயது 28). இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 8 வயதில் மகனும், 6 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் செந்தமிழ்ச்செல்விக்கு அடிக்கடி வயிற்றுவலி இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த செந்தமிழ்ச்செல்வி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் செந்தமிழ்ச்செல்வியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

Our Facebook Page
%d bloggers like this: