விவசாயிகள் கிசான் சம்மன் நிதி 6000 பெற விண்ணப்பிப்பது எப்படி?

1209

விவசாயிகள் கிசான் சம்மன் நிதி 6000 பெற விண்ணப்பிப்பது எப்படி?

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பி.எம்-கிசான்) என்பது விவசாயிகளுக்குக்கான மத்திய அரசின் நலத்திட்டமாகும். இது இந்திய அரசினால் 100% நிதி அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் 1.12.2018 முதல் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மூன்று சமமான தவணைகளில் விவசாயிகளுக்கு ரூபாய் 2,000/- என்ற அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 6,000/- என்ற நிலையான தொகையை மத்திய அரசு வழங்குகிறது.

வரையறைகள்

இத்திட்டத்திற்கான குடும்பத்தின் வரையறை கணவன், மனைவி மற்றும் பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள்.

இந்த நிதி உதவியைப் பெற வேண்டும் என்றால் விவசாயிகளுக்கு 2 ஹெக்டேருக்கு குறைவாக (சிறு மற்றும் குறு விவசாயி) அதாவது 5 ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும்.

பயன்கள்

மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் இந்த நிதி உதவியானது ஏழை விவசாயிகளின் வருவாயாக மட்டுமில்லாமல் பயிர்காலங்களில் அவர்களுக்குத் தேவைப்படும் நிதியாகவும் இருக்கும்.

விவசாயிகளுக்குக் கடன் அளித்து விட்டு அதைத் தள்ளுபடி செய்வதை விட உதவித்தொகையாக அளித்தால் அரசுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரியளவில் பாதிப்பு இருக்காது.

10-ம் வகுப்பு தேர்வில் காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு விலக்கு?

பெண்களுக்கான கடன் திட்டங்கள் (Loan Schemes for Women)

திட்டத்திற்கு உட்படாதவர்கள்

முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள், மத்திய / மாநில அரசு ஊழியர்கள். கடந்த மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்திய அனைத்து நபர்கள்.

மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10,000 / அல்லது அதற்கு மேற்பட்ட அனைத்து மேலதிக / ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள்.

மருத்துவர்கள், பொறியாளர்கள், வக்கீல்கள், பட்டய கணக்காளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் போன்ற வல்லுநர்கள்.

பதிவு செய்யும் முறை

விவசாயிகள் அவர்களாகவே தங்கள் பதிவுகளை பிரதம மந்திரி கிசான் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (https://pmkisan.gov.in/) மற்றும் PMKISAN என்ற கைபேசி செயலி வாயிலாக செய்ய முடியும்.

சிறு மற்றும் குறு விவசாயி தங்களது ஆதார் எண், நிலத்தின் சர்வே எண் மற்றும் கஸ்ரா எண் விவரங்கள் கொண்டு தாங்களாகவே பதிவு செய்யலாம். இச்செயலி மற்றும் வலைத்தளம் மூலமாகவே விவசாயிகள் தங்கள் வங்கி கணக்கில் இந்த பணம் வந்துவிட்டதா இல்லையா என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

நன்றி – சிறுதொழில் முனைவோர்.காம்
%d bloggers like this: