நாமக்கல்லில் விவசாயம் மற்றும் கால்நடை கண்காட்சி 2019.

நாமக்கல்லில் விவசாயம் மற்றும் கால்நடை கண்காட்சி 2019.

வருகிற 2019 மே 3, 4 மற்றும் 5-ம் தேதி, நாமக்கல் மாவட்டத்திலுள்ள உள்ள ஸ்ரீ லட்சுமி மஹால் விவசாய கண்காட்சி 2019 என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில் பண்ணைக்கருவிகள், இயற்கை இடுபொருட்கள், கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், சோலார் பம்ப் செட், ஒருங்கிணைந்த பண்ணையம், சொட்டுநீர்ப் பாசனம், விதைகள், வேளாண் நவீன தொழில்நுட்பங்கள், நவீன வேளாண் கருவிகள், பால் பண்ணை அதி நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் முறை போன்றவை இடம் பெற உள்ளது.

இன்றைய விவசாய உலகில் நவீன இயந்திரங்களின் பயன்பாடு, அதை பயன்படுத்தும் முறை, களை எடுக்கும் கருவி, அறுவடை கருவி, கலப்பை போன்ற கருவிகளின் பயன்பாடு குறித்து இந்த கருத்தரங்கில் விளக்கப்படுகிறது.

இந்த விவசாய கண்காட்சியில் கால்நடை வளர்ப்பில் உள்ள தொழில் நுட்பங்கள், நுணுக்கங்கள், பால் பண்ணை அமைக்கும் முறைக்கான விவசாய அரங்குகள் மற்றும் முன்னோடி கால்நடை வளர்ப்பவர்கள் ஆலோசனைகள் இடம் பெற உள்ளன.

பல்வேறு தலைப்புகளில் விவசாய வல்லுனர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் சிறப்புரையாற்ற உள்ளனர். இந்த கண்காட்சியில் புதிய நவீன விவசாய கருவிகள், புதிய விவசாய கண்டுப்பிடிப்புகளுக்கு விவசாய அரங்கு அமைத்து தருவதாக கூறியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இதில் நெல் கண்காட்சியும் இடம் பெற உள்ளது. விவசாயிகள் பெருமக்கள் தங்களிடம் உள்ள நெல் இரகங்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தி பயன்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த கண்காட்சியில் விவசாயம் சார்ந்த அரங்குகளுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. விவசாயம் சார்ந்த அரங்குகளுக்கு முன்பதிவு செய்ய 9940320902 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

கண்காட்சி நடைபெறும் நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை

முகவரி :

ஸ்ரீ லட்சுமி மஹால்,
பொம்மைக்குட்டை மேடு,
நாமக்கல் மாவட்டம் – 637003.

நன்றி – பசுமை தமிழகம்

24total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: