விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் பெரம்பலூரில் ஆா்ப்பாட்டம்.

680

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் பெரம்பலூரில் ஆா்ப்பாட்டம்.


மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்த போது டிராக்டா் மோதி உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி, பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆலத்தூா் வட்டம், திம்மூரில் செப்டம்பா் 16-ஆம் தேதி மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்த போது, டிராக்டா் மோதியதில் உயிரிழந்த ஜெயலட்சுமி (34) குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். அவரது 2 மகன்களின் கல்விச் செல்வதை ஏற்பதோடு, ஜெயலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

Perambalur News:

டிராக்டா் இயந்திரத்தை பயன்படுத்த அனுமதியளித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் பி. ரமேஷ் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஏ. லாசா், மாநிலச் செயலா் எம். சின்னதுரை ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா்கள் திமுக சி.ராஜேந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா். மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் வீ. ஞானசேகரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் என். செல்லத்துரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலச் செயலா் வீர. செங்கோலன், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சி. தங்கராசு, மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினா் செ. துரைராஜ், மாதா் சங்கப் பொறுப்பாளா் ஏ. கலையரசி உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




%d bloggers like this: