விபத்தில் இருந்து வீட்டை காத்த நாய் க்கு பாராட்டு

விபத்தில் இருந்து வீட்டை காத்த நாய்க்கு பாராட்டு.

நியூயார்கில் உள்ள டக்கோ என்னும் இடத்தைச் சேர்ந்த 11 வயதான பிட்புல் வகை செல்லநாய் தனது வீட்டில்  நடக்கவிருந்த விபத்தைத் தடுத்துள்ளது. இந்த செய்தி இணையத்தில் பலரதின் மனதை வென்றுள்ளது.

சேடி என பெயரிடப்பட்டுள்ள இந்த நாய் தனது வீட்டின் அடிதளத்தில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவை நுகர்ந்து வீட்டின் அருகாமையில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்தது.

டக்கோ போலீஸார் அளித்த தகவல்படி, ‘கடந்த புதன் கிழமை, மாலை 3.45 மணிக்கு நாய் ஓன்று தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருப்பதாக, அக்கம் பக்கத்தினர் புகார் கொடுத்தனர். அதையடுத்து அங்கு சென்ற போலீஸார் பின்புறம் வழியாக வீட்டுக்குள் நுழைந்து நாயை பிடிக்க முயன்றனர். அப்போது, ஏரிவாயுக் கசிவதை அறிந்தனர். பெரும் சேதம் ஏற்படும் முன்னரே அதைத் தடுத்தனர்’ என்றுள்ளனர்.

இதையடுத்து இந்த செய்தி இணையத்தில் பகிரப்பட்டு பலரது மனதை வென்றுள்ளது. ‘சேடி- கிரேட் வொர்க், எங்களுக்கு எப்பவாவது உதவு வேணும்னா நீதான் முதல் ப்ரையாரிட்டி!’ என போலீஸார் தங்களது பாராட்டுக்களை சேடிக்கு தெரிவித்தனர்.

மேலும் ‘நீ ஓரு வீராங்கனை’ என சேடியின் உரிமையாளர் செரினா காஸ்டெலோ சேடியின் புகைப்படத்துடன் தனது பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டிருந்தார்.

இணையத்தில் பகிரப்பட்டதால் இந்தப் பதிவுக்கு தொடர்ந்து பல லைக்குகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

நன்றி – NDTV

4total visits,2visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: