விண்டோஸ் போன்களில் வாட்ஸ்அப் செயலி நீக்கப்படுகிறது! அடுத்த ஆப்பு ஆண்ட்ராய்டுக்கா?
[the_ad id=”7332″]
இந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் விண்டோஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்அப் வேலை செய்யாது. இதன் தொடக்கமாக இன்று முதல் விண்டோஸ் ஸ்டோரில் இருந்து வாட்ஸ்அப் செயலி நீக்கப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலி விண்டோஸ் மற்றும் குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு தளங்களில் இனி இயங்காது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக தற்போது விண்டோஸ் ஸ்டோரில் இருந்து வாட்ஸ்அப் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு விண்டோஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக இன்று (ஜூலை 1) முதல் விண்டோஸ் ஸ்டோரில் இருந்து வாட்ஸ்அப் செயலி நீக்கம் செய்யப்படுகிறது. இதனால், இனி வாட்ஸ்அப்பை விண்டோஸ் மொபைல்களில் டவுன்லோடு செய்ய முடியாது. ஏற்கனவே, விண்டோஸ் மொபைலில் வாட்ஸ்அப் இருந்தால், அதுவும் டிசம்பர் மாதத்திற்கு பிறகு இயங்காது.
[the_ad id=”7251″]
அதுபோல, ஆண்ட்ராய்டு 2.3.7 மற்றும் iOS 7 இயங்குதளத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாட்ஸ்அப் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாட்ஸ்அப்பின், சமீபத்திய கேள்வி பதில்கள் (FAQ) பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட்போன்கள் மூலமாக புதிதாக வாட்ஸ்அப் கணக்கு எதுவும் தொடங்க முடியாது. ஏற்கனவே, வாட்ஸ்அப் இருக்கும் பட்சத்தில், அதன் சேவையும் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்க ஸ்மார்ட்போன் எந்த இயங்குதளத்திலுள்ளது என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். பயனாளர்கள் ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ் பகுதிக்குள் சென்று, தங்களுடைய போன் எந்த வெர்ஷனில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்கு Settings பிரிவுக்குள் சென்று Phone>About என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில், ஸ்மார்ட்போன் எந்த இயங்குதளத்தில் இயங்குகிறது என்பது காட்டப்படும். ஆண்ட்ராய்டு 2.3.7 வெர்ஷன் இருந்தால், அந்த போனில் அடுத்த வருடம் வாட்ஸ்அப் வேலை செய்யாது.
ஆண்ட்ராய்டு 4.03 வெர்ஷன் அல்லது அதற்கு மேல் உள்ள ஸ்மார்ட்போனில் தான் வருங்காலத்தில் வாட்ஸ்அப் வேலை செய்யும். வாட்ஸ்அப்பை புதிய தொழில்நுட்ப வசதிகள் கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறுகிறார்கள்.
பார்ப்போம் இன்னும் என்னென்ன செய்கிறார்கள் என்று. இதையெல்லாம் பார்த்து நாங்க ஏன் கவலைப் படவேண்டும். இது இல்லையென்றால் இன்னொன்று என்று சிலர் கூறுகின்றனர்.
[the_ad id=”7250″]
[the_ad id=”7252″]
You must log in to post a comment.