தற்கொலை

சென்னையிலிருந்து சேலம் வந்து விடுதியில் தங்கி தற்கொலை செய்துகொண்ட குடும்பம்.

சென்னையிலிருந்து சேலம் வந்து விடுதியில் தங்கி தற்கொலை செய்துகொண்ட குடும்பம்.


சேலம் தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலைசெய்துகொண்டிருக்கின்றனர்.

சென்னை சூலைமேடு பகுதியை சேர்ந்த விஜயகுமார், மனைவி அனுராதா மற்றும் மகள்கள் ஆர்த்தி, ஆசிகா ஆகியோருடன் புதன்கிழமை சேலம் வந்திருந்தார். புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) காலை விஜயகுமாரின் மூத்த மகள் ஆர்த்தி தொலைபேசி வாயிலாக விடுதி ஊழியர்களை அவசர உதவிக்கு அழைத்துள்ளார். உடனே அறைக்கு விரைந்த ஊழியர்கள் அங்கு உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ஆர்த்தியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அறையில் விஜயகுமார், அவரது மனைவி அனுராதா, இரண்டாவது மகள் ஆசிகா ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். விஜயகுமார் கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் நடத்திய விசாரனையில் தெரிய வந்துள்ளது.
Leave a Reply

%d bloggers like this: