விஜய் சங்கருக்கு எது பிரஷர் பௌலிங்கா? ஹிந்தியில் பேசுவதா?

விஜய் சங்கருக்கு எது பிரஷர் பௌலிங்கா? ஹிந்தியில் பேசுவதா?

நேற்று (05.03.2019) நாக்பூரில் இரண்டாவது ஒரு நாள் போட்டி இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடந்தது.
முதலில் ஆடிய இந்திய அணி 250 ரன்களை எடுத்தது. கேப்டன் விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தினால் அவரும் சதமடித்து அணிக்கும் கௌரவமான ரன்களை பெற்றுத்தந்தார். 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது.  இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தத் தொடரில் 2-0 என்று தற்போது முன்னிலை வகிக்கிறது. இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரை அற்புதமாக வீசி அணியின் வெற்றிக்கு விஜய் சங்கர் காரணமாக இருந்தார். இந்திய அணியின் விஜய் சங்கரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
அதில்  விஜய் சங்கரிடம் உங்களுக்கு கடைசி ஓவர் வீசிய போது பிரஷரா, ஹிந்தி பேசுவது பிரஷரா என்று சக வீரர் சாஹல் கேட்டார். விஜய் சங்கர் சிரித்துக் கொண்டே ஹிந்தியில் பேசுவதுதான் கொஞ்சம் பிரஷர்” என்றார். கடைசி ஓவர் எப்படி போட வேண்டும் யோசித்து தயாராகவே இருந்தேன். அதையே செயல்படுத்தினேன் என்றார்.
இக்கட்டான சூழலில் சிறப்பாக பந்து வீசி இந்திய அணிக்கு வெற்றியை தந்த விஜய் சங்கரை நாமும் வாழ்த்துவோம்.

37total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: