வாஷிங் மெஷின்பராமரிக்க சில டிப்ஸ்!

429

வாஷிங் மெஷின்பராமரிக்க சில டிப்ஸ்!

[the_ad id=”7250″]

காசு கொடுத்து நாம் விலையுயர்ந்த பொருளை வாங்குவோம். அது நமது முறையற்ற பயன்பாட்டால் கெட்டுப் போய்க் கொண்டு இருக்கிறது என்பதைத் தெரியாமல் அதைப் பயன்படுத்துகிறோம். அந்த வகையில் எண்ணற்ற பொருள்கள் இருக்கின்றது. இந்தப் பதிவில் நாம் பார்க்க இருப்பது  வாஷிங் மெஷினில் நாம் மேற்கொள்ளும் தவறான பயன்பாடுகள் பற்றிப் பார்க்கப் போகிறோம்.

  • சீக்கிரமா வேலை முடிக்கனும்னு நினைத்து அதிகமான துணிகளை ஒரே நேரத்தில் போடக் கூடாது. இதனால் துணிகளும் பளிச்னு ஆகாது. மெஷினும் சீக்கிரமா பழுதாகிடும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் லோட் அதிகமாக இழுக்கும் போது மெஷினின்  பிரதானம் மோட்டார் பழுதாகிவிடும். அதனால் அளவா போட்டு அழக எடுங்கள்.
  • சின்ன சின்ன துணிகளை  மெஷினில் தனியாகப் போடக்கூடாது. சில நேரங்களில் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற மெஷின் கொடுக்கும் அழுத்தத்தில் சின்ன துணிகள் ட்ரைன் பைபிள் அடைத்துக் கொள்ளும் அல்லது சில நேரம் அப்படி ட்ரைன் பைப் வழியா வெளியே செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. வெளி போய்விட்ட துணி மட்டும் போகும், குழாய்க்குள் மாட்டிக்கொண்டால் அதைச் சரி பண்ணச் செலவு செய்ய வேண்டும். சின்னத் துணி என்ன என்று கேட்பது தெரிகிறது. உதாரணத்துக்கு சொல்லனும்னா கைக்குழந்தைகள் சாக்ஸ் சொல்லலாம். (இதப் போய் எப்படி தனியா துவைக்கிற தென்று  கேக்குறீங்க காதில் விழுது – ஒன்று செய்க இது மாதிரியான சின்ன சின்ன துணிகளை எல்லாம் ஒரு தலகாணி  உறையில் போட்டு மெஷினில் போட்டுடுங்க.)

[the_ad id=”7251″]

  • பஞ்சு வெளியாகும் படியான பொருட்களை மெஷினில் துவைக்கக் கூடாது. இதில் பஞ்சு பிரிந்து  வந்துச்சுன்னா மெஷின் ட்ரைன் பைப் அடைத்துக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது.
  • மெஷினில துணி போடுவதற்கு முன்பு பாக்கெட்டில் பின், காசு, போன்ற பொருட்கள்  கவனிக்காமல்  மெஷினில் போட்டுத் துவைக்காதீர்கள்.
  • பெண்கள் உள்ளாடைகளையும் தனியா போட்டுத் துவைக்காதீர்கள். அதிலுள்ள பின்  மெஷினின் உள்ளகத்தை ஸ்கராச் செய்து கெட்டுப்போய்விடும். முன்னே அதே யோசனைதான்.  தலகாணி உறையில் போட்டு மெஷினில் இட்டு துவைச்சிடுங்க.
  • பெட்ரோல், டீசல், கெரஷின், திண்ணர், பெயிண்ட் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கூட  மெஷினில் போடக்கூடாது என்று சில நிறுவனங்கள் வலியுறுத்துகிறது. காரணம் ட்ரையரில் அதி வேகமாகச் சுற்றும் போது தீப்பிடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர்.
  • சூ போன்ற தோலினால் ஆன பொருட்களை வாஷிங் மெஷினில் போட்டுத் துவைக்கக் கூடாது. இதனால் மெஷினுக்கு பிரச்சனை இல்லை. சூவிற்குத்தான் பாதிப்பு உண்டாகும். தோலின் தன்மை மாறிவிடும். இதனால் கையில்  துவைப்பது சாலச்சிறந்தது.
  • நீங்க வளர்க்கும் நாய், பூனை போன்றவற்றைத் தொடைக்கும் துணிகளை மெஷினில் போடாதீர்கள். உங்கள் செல்ல நாய் அல்லது பூனையின் முடி மெஷினில் உட்புறத்தில், ட்ரைன் பைப் போன்றவற்றில் ஒட்டிக் கொண்டால் அதைச் சரி செய்வது சிரமம்.

[the_ad id=”7251″]
%d bloggers like this: