தா.பழூர் அருகே திருமணமாகாத ஏக்கம் வாலிபர் தீக்குளித்து தற்கொலை.

Hits: 21

தா.பழூர் அருகே திருமணமாகாத ஏக்கம் வாலிபர் தீக்குளித்து தற்கொலை.

தா.பழூர் அருகே திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமம் காலனி தெருவைச் சேர்ந்தவர் கங்காரு. இவரது மகன் மணிவேல்(30). இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், திருமணம் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மணிவேல், கடந்த 9ம் தேதி தனது வீட்டின் முன்புறம் உள்ள திண்ணையில் படுத்து தூங்கினார். நள்ளிரவில் மணிவேலுவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது, மணிவேல் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டது தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் மணிவேலுவை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது தாயார் கோசலை தா.பழூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

தினகரன்


அரியலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply