வாட்ஸ் ஆப்பில் மீண்டும் ஓர் மாற்றம்

வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தும் போது, நாம் ஒரு தடவை மெசேஜ் அனுப்பிவிட்டால் அதை அழிக்க முடியாதவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

கடந்த வருடம் வாட்ஸ் ஆப் மாற்றம் செய்து அனுப்பிய மெசேஜ்களை 7 நிமிடத்திற்குள் அழித்துவிடலாம். தற்போதைய அப்டேட்ஸில் ஒரு மணி நேரத்திற்குள் நாம் அனுப்பிய மெசேஜ்ஜை அழிக்க முடியும்.

இந்த வசதியானது தற்போது ஆண்ட்ராய்டு மொபைல்களில் மட்டும் பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் iOS மொபைல்களுக்கு இந்த சலுகை வழங்க உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த முறையில் டெக்ஸ்ட் மெசேஜ்கள் மற்றுமல்லாமல் நாம் அனுப்பும் போட்டோ, வீடியோ மற்றும்  அழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

%d bloggers like this: