சமீபத்திய பதிவுகள்
Search

வாட்ஸ் ஆப்பில் பீட்ட அப்டேட் இதனால் கூடுதல் சேவைகள்.

வாட்ஸ் ஆப்பில் பீட்ட அப்டேட் இதனால் கூடுதல் சேவைகள்.

நம்முடைய ஸ்மார்ட் போனில் ஏராளமான அந்தரங்க தகவல்களை நாம் வைத்து இருப்போம். இதை வாட்ஸ் ஆப் வழியாகவும் பிறர் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கின்றது.

இந்நிலையில், வாட்ஸ் ஆப்பில் இருந்து பாதுகாப்ப தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

அந்தரங்க தகவல்களை பாதுகாப்பது எவ்வாறு என்று தெரிந்து கொள்ளலாம்.

வாட்ஸ் ஆப்பில் பீட்ட அப்டேட்:

வாட்ஸ் ஆப் மொபைல் அப்ளிகேஷனில் ஐபோன்களுக்கு சமீபத்தில் பீட்ட அப்டேட்டில் இந்த வசதி அறிமுகம் செய்துள்ளது. பீட்டா அப்டேட் வைத்து இருப்போர்கள் 2.19.20.19 என்ற வெர்ஷனில் கொண்ட வாட்ஸ் ஆப் பீட்டா வெர்ஷனில் இந்த வசதியை இப்போதே பயன்படுத்தலாம்.

பேஸ்லாக் செய்ய முடியும்:

இதில் ஐபோன் எக்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலாக பேஸ் லாக் செய்து கொள்ளும் வசதியும் இருக்கின்றது.

லாக் எடுக்காமல் பேசலாம்:

இந்த வசதிகள் போனில் இருக்கும் போது, நமக்கு வரும் அழைப்புகளையும் எஸ்எம்எஸ்களையும் போனை லாக்ஆன் செய்யாமலேயே நாம் பயன்படுத்த முடியும்.

பதிவு செய்ய வேண்டும்: இந்த வசதிகளை நாம் பயன்படுத்தும் முன் நாம் போன் செட்டிங்கிஸ் கைரேகை (முகம்) ஆகியவற்றை லாக் செய்ய வழியில் பதிவு செய்ய வேண்டும். கைரேகை சென்சார் முக அடையாளம் கொண்டு அன்லாக் செய்ய முடியாதபோது, பின்கோடு மூலம் திறக்கும் வசதி இருக்கின்றது.

ஆன்ட்ராய்டு போன்கள்:

ஐபோன்களுக்கு மட்டும் இந்த வசதி வருகின்றது. விரைவில் ஆன்ட்ராய்டு போன்களுக்கும் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

source - gizbotLeave a Reply

%d bloggers like this: