வாட்ஸ்அப் பார்ப்பதால் இப்படி ஒரு நன்மை இருக்கா!
[the_ad id=”7332″]
சமீபத்தில் வாட்ஸ்அப் குறித்து சர்வதேச அளவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் வாட்ஸ்அப் அதிக நேரம் பயன்படுத்துவது நன்மைதான் எனச் சுவாரஸ்யமான தகவலைத் தெரிவித்துள்ளனர்.
இன்று வாட்ஸ்அப் இல்லாத ஆண்ட்ராய்டு மொபைல் போன்களே இல்லை என்றுதான் அடித்துக் கூறலாம்.
காலையில் ஒரு குட் மார்னிங் எனும் குறுஞ்செய்தியோடு வரும் பூக்கள் காலையில் நம்மை உற்சாகப்படுத்த போதுமானதாக மாறிவிட்டது.
மேலும், ஒவ்வொருவரின் மனோநிலையை அவர்களது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்தாலே தெரிந்துவிடும். இன்னும் சொல்ல வேண்டுமெனில் மற்றவர்கள் ஸ்டேட்டஸ் பார்ப்பதில் ஓர் அலாதி பிரியம்.
செல்போனை அனைவரும் அதிகம் பயன்படுத்துவது ஆபத்தானது எனக் கூறுவது ஒரு வகையில் உண்மை. இருந்தாலும் வாட்ஸ் அப் அதில் விதி விலக்கு என்பதை போல அந்த ஆய்வில் சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.
[the_ad id=”7251″]
மனித கணினி சர்வதேச ஆய்வுக்கழகம் இது குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் தனிமை, மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்க வாட்ஸ் அப் செயலியில் உள்ள குரூப் சாட், தனி நபர் சாட் ஆகியவை பெரும் உதவி செய்கின்றன என தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு குறித்து இங்கிலாந்தின் எட்ஜ் கில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கூறுகையில், சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவது அபாயமான ஒன்று என கருதுகின்றனர். அது அந்த அளவு மோசமானது அல்ல. அருகில் இல்லாத குடும்பத்தினர், அரட்டை அடிக்கும் நண்பர்கள் ஆகியோருடன் இருப்பதைப்போல உணர வைப்பதில் வாட்ஸ் அப் போன்ற செயலிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தனிமை எனும் கொடிய நோயை இதுபோன்ற செயலிகளே போக்குகின்றன என கூறியுள்ளார்.
ஏற்கனவே வாட்ஸ்அப் செயலியில் வம்படியாக சார்ட் செய்து கொண்டிருக்கும் நபர்களுக்கு இது நல்ல செய்திதான்.
எதுவும் அளவுக்கு மீறி போகும்போதுதான் பிரச்சனைகளே வருகிறது. அளவோடு செய்யும் எந்த ஒன்றும் அவ்வளவாகப் பாதிப்பை உண்டாக்காது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே.
[the_ad id=”7250″]
[the_ad id=”7252″]
You must log in to post a comment.