சமீபத்திய பதிவுகள்
Search

வினையாகும் வாட்ஸ்அப் செய்திகள்.

வினையாகும் வாட்ஸ்அப் செய்திகள்.

கேரளாவில் பத்திரிக்கை ஒன்றில் திருமண வாழ்த்து பகுதியில் ஒரு தம்பதியின் புகைப்படம் வெளியானது. மணப்பெண் ஜூபி ஜோசப், செம்பந்தொட்டியை சேர்ந்தவர். மணமகன் அனூப் செபஸ்டின், செருபுழாவை சேர்ந்தவர். இருவருக்கும் கடந்த 4ம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.  அந்த திருமண புகைப்படத்தில் மணமகனை விட மணமகள் மிக குண்டாக இருந்ததுடன், சற்று வயதான தோற்றத்தில் தெரிகிறார். இதனையடுத்து இவர்களது புகைப்படத்துடன் வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி உலா வரத்தொடங்கியது.

ஜூபி ஜோசப்பிற்கு 48 வயதாகிறது, சொத்துக்காக தன்னை விட மூத்த பெண்ணை 25 வயது வாலிபரான அனூப் திருமணம் செய்து கொண்டார் என வாட்ஸ்அப்பில் செய்தி பரவ தொடங்கியது.  இந்த பார்வர்டு செய்தி மணமக்களுக்கும் பார்வர்டு செய்யப்பட்டுள்ளது. சந்தோஷமாக திருமண வாழ்வை துவங்கியவர்கள் இச்செய்தியால் ரொம்பவும் மன வேதனை அடைந்துள்ளனர். போதாக்குறைக்கு உறவினர்களின் விசாரிப்புகளால் நொந்துப் போய்  போலீசில் புகார் செய்துள்ளனர்.

மணப்பெண் ஜூபிக்கு 27 வயதுதானாகிறது மணமகனின் வயதும்  29 என்பது குறிப்பிடத்தக்கது.  மனமகன் இந்தியாவிலும், மனமகள் யு.எ.இ. ஷார்ஜாவிலும் வேலை செய்கிறார்கள். இருவருரின் விருப்பத்துடன் தான் திருமணமும் நடந்துள்ளது. யாரோ அடையாளம் தெரியாத ஒருவர் பரப்பிய வதந்தி வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியுள்ளது. விளையாட்டுக்காகவோ அல்லது வேண்டுமென்றோ செய்த நபரை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்  என அனூப், ஜூபி தம்பதியர் தெரிவித்துள்ளனர்.

இனிவரும் காலங்களில் வாட்ஸ்அப்பில் வரும் செய்திகளின் தன்மை அறியாமலும் ஆராயாமலும்  பார்வர்டு செய்யும் பழக்கத்தை விடவேண்டும். நம்முடைய தினசரி வாழ்க்கையில் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக தளங்கள் முக்கிய  இடம்பெற்றுள்ளதை நாம் மறுத்துவிட முடியாது. சமூக வலைதளங்களினால் பல நன்மைகள் இருந்தாலும் தீமைகளிருப்பதையும் உணர்ந்து செயல் பட வேண்டும். ஒரு செய்தியை பகிர்வதற்கு முன்பு அந்த செய்திகளின் தன்மை, அது யார் நமக்கு அனுப்பியது, இச்செய்திகளை மற்றவர்களுக்கு பரப்புவதால் என்ன பயன் என்பதை சமூக உணர்வோடு சிந்தித்து செயல்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. சிந்திப்போம், செயல்படுவோம்.
Leave a Reply

%d bloggers like this: