புதிய செய்தி :

வாட்ஸ்அப்பில் ஒரு புதிய மாற்றம்

வாட்ஸ்அப்பில் ஒரு புதிய மாற்றம்.


வாட்ஸ்ஆப் தனது விண்டோஸ், ஆண்ராய்டு, ஐஓஎஸ் தளங்களில் “குறுஞ்செய்தி அனுப்பு” (Send Message) என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கியமாக இந்த வசதியை பயன்படுத்தி அட்மின், குழுவின் உறுப்பினர்களை குரூப்பில் மெசேஜ் அனுப்பவிடாமல் தடை விதிக்க முடியும்.

கடந்த பல மாதங்களாக இதற்காக பணியாற்றி வந்த வாட்ஸ்ஆப் , தற்போது தனது அனைத்து பயனர்களுக்கும் இவ்வசதியை வழங்கியுள்ளது. உறுப்பினர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளுக்கான அமைப்புகளை(செட்டிங்ஸ்) குழுவின் அட்மின், குழு தகவல் மற்றும் குழு அமைப்புகள்(Group Info and Group Settings) பகுதிக்கு சென்று மாற்றலாம். குழு அமைப்புகள் பகுதியின் கீழ் “குறுஞ்செய்தி அனுப்பு” (Send Message) என்ற புதிய தேர்வை காணலாம். அதை தேர்வு செய்தால் மேலும் இரு தேர்வுகளை காணமுடியும். ‘அட்மின் மட்டும்’ மற்றும் ‘அனைத்து உறுப்பினர்கள்’.

‘அட்மின் மட்டும்’ என்பதை தேர்வு செய்தால், அதன் பின்னர் அட்மின் தவிர வேறு எவரும் குரூப்பில் குறுஞ்செய்திகள் அனுப்ப முடியாது. இந்த அமைப்புகளை அட்மின் மாற்றினால், எப்போதும் போல வாட்ஸ்ஆப், குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அது பற்றிய அறிவிக்கையை செய்து, இனிமேல் குறுஞ்செய்திகளை அனுப்ப முடியாது என்பதை தெரிவிக்கும்.

இந்த புதிய வசதியின் அமைப்புகளை மாற்றுவதற்கு எந்தவொரு வரம்பும் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் அமைப்பை ‘அட்மின் மட்டும்’ தேர்விலிருந்து ‘அனைத்து உறுப்பினர்கள்’ தேர்விற்கு அட்மினால் மாற்றமுடியும். இந்த ஆண்டின் சிறந்த வாட்ஸ்ஆப் அம்சமாக பார்க்கப்படும் இதன் மூலம், தேவையில்லா குறுஞ்செய்திகள் மீண்டும் மீண்டும் பரப்பப்படுவது தடுக்கப்படும். இந்த மாதிரியான மெசஜ்கள் குரூப்களில் பகிரப்படுவதன் மூலமே வைரல் ஆகின்றன. எதிர்காலத்தில், அட்மின் குறிப்பிட்ட உறுப்பினர்களின் மெசேஜ்களை மட்டும் அனுமதிக்கும் வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

பீட்டா தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இந்த வசதி, ஆண்ராய்டு பீட்டா வெர்சனான 2.18.201லும், ஐஓஎஸ் 2.18.70லும் கிடைக்கும். ஆண்ராய்டின் நிலையான வெர்சன் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படவுள்ளது.

ஐஓஎஸ் தளத்தில் இந்த ‘குறுஞ்செய்தி அனுப்பு’ வசதி ஐஓஎஸ் தளத்தில் விரைவாக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், ஆண்ராய்டு மற்றும் விண்டோஸ்ல் தாமதமாகிறது. இது சர்வரில் மட்டுமே மாற்றம் தேவைப்படும் வசதி என்பதால், பழைய வெர்சன் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி வந்தாலும் இவ்வசதி கிடைக்கும். ஆனால் வாட்ஸ்ஆப் செயலியை அப்டேட் செய்து பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது.

பயனர்களின் அனுபவம் வாட்ஸ்ஆப் தனது குரூப் பகுதியின் அமைப்புகளை மேம்படுத்த கடினமாக பணியாற்றி வருகிறது. ஏற்கனவே பல அட்மின்கள் உள்ள குரூப்பில், ஒரு அட்மின் மற்றொரு அட்மினின் பதவியை பறிக்கும் வசதியின் மூலம், பயனர்களின் அனுபவம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

thanks - tamil.gizbot.comLeave a Reply