குன்னம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்

குன்னம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்.

413

குன்னம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்.

குன்னத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் உத்தரவின்படி கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி குன்னம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்தனர். இவ்வாறு சீட் பெல்ட் அணியாமலும், செல்போனில் பேசிக்கொண்டு கவனக்குறைவாக சென்றவர்கள் மீதும், தலைகவசம் அணியாமலும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முககவசம் அணியாமலும் சென்றவர்கள் மீதும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் அனைத்து முக்கிய சாலைகளையும் போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து அடைத்தனர். பெரம்பலூர் மாவட்ட எல்லையான குன்னம் அருகே உள்ள அல்லிநகரத்தில் சோதனைச்சாவடி அமைத்து, அந்த வழியாக வந்த வாகனங்களை போலீசார் கண்காணித்து இ-பதிவு உள்ள வாகனங்களை மட்டும் அனுமதித்தனர். இ-பதிவு இல்லாத இரு சக்கர வாகனங்கள் உடள்பட அனைத்து வாகனங்களையும் குன்னம் போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

தினத்தந்தி

Our Facebook Page




%d bloggers like this: