பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி


பெரம்பலூர் அருகே  அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சாலையில் நடந்துச் சென்ற முதியவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

பெரம்பலூர் அருகிலுள்ள களரம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னையன் (75 ). இவர், களரம்பட்டியிலிருந்து அம்மாபாளையம் செல்லும் சாலையில், வெள்ளிக்கிழமை காலை நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சின்னையன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.  தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி


மேலும் மாவட்ட செய்திகள் வாசிக்க – பெரம்பலூர் மாவட்ட செய்திகள்


Leave a Reply

%d bloggers like this: