வாகனம் மோதி மோதி மான் படுகாயம்

தண்ணீர்பந்தல் அருகே வாகனம் மோதி மான் படுகாயம்.

468

தண்ணீர்பந்தல் அருகே வாகனம் மோதி மான் படுகாயம்.

பெரம்பலூர் மாவட்ட வனப்பகுதிகளில் ஏராளமான மான்கள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து மான்கள் வழிதவறி ஊருக்குள் வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வழிதவறி தண்ணீர் தேடி 3 வயதுடைய பெண் மான் ஒன்று பெரம்பலூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் கிராமத்திற்கு வந்தது. பின்னர் அந்த மான் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த வாகனம் மான் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய மானை அந்த வழியாக சென்ற இளைஞர்கள் 2 பேர் மீட்டு, சிகிச்சைக்காக பெரம்பலூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அந்த மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த மானை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Keywords: வாகனம் மோதி, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
%d bloggers like this: