கரூரில் மேற்படிப்புகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கரூரில் மேற்படிப்புகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி


கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மேற்படிப்புகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சிஏ, சிஎம்ஏ, சிஎஸ் போன்ற மேற்படிப்பிற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி பள்ளியின் கலாம் கூடலரங்கில் நடைபெற்றது. முதுகலைத் தமிழாசிரியை முனைவர் செல்வி வரவேற்றார். பள்ளி முதல்வர் டி. பிரகாசம் தலைமை வகித்தார்.

பள்ளித் தாளாளர் ஆர்த்தி. ஆர். சாமிநாதன், பள்ளியின் ஆலோசகர் பி. பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆடிட்டர் விஜயகுமார் பேசுகையில், மாணவர்கள் தங்கள் வாழ்வின் லட்சியத்தை சரியாக தேர்ந்தெடுத்தல் வேண்டும். லட்சியத்தை அடையும் வரை அயராது உழைத்தல் வேண்டும் என்றார்.

மேலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆடிட்டர் ஹரிப்பிரியா பேசுகையில், அனைத்துத் துறை சார்ந்த மாணவர்களும் சிஏ படிக்கலாம். சுயமாக சிந்திக்க வேண்டும். நம் எதிர்கால வாழ்க்கை முறை பற்றி திட்டமிடல் அவசியம். படிக்கின்ற காலங்களில் பாடங்களை முழுமையாகவும், கவனமாகவும் படித்தல் அவசியம் என்றார். நிகழ்ச்சியில் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் திரளாக பங்கேற்றனர்.
Leave a Reply

%d bloggers like this: