வளைகுடா நாடுகளில் இன்று ஹஜ் பெருநாள்.

வளைகுடா நாடுகளில் இன்று ஹஜ் பெருநாள்.

வளைகுடா நாடுகளில் இன்று ஈதுல் அத்ஹா என்னும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த புனித நாளிற்கான சிறப்புத் தொழுகைக்குப் பிறகு ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி தமது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

சவுதி அரேபியாவில் இன்று பக்ரீத் பெருநாள் கொண்டாடப்படுகிறது. ஹஜ் யாத்திரிகர்கள் தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள். இரண்டு  புனித பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தொழுதனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து மாநிலங்களிலும் இன்று பக்ரீத் பெருநாளுக்கான சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

கத்தாரிலும் இன்று பக்ரீத் பெருநாளுக்கான சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகைக்கு பிறகு நண்பர்கள் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.

இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ்லும் இன்று பக்ரீத் பெருநாள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

-வளைகுடா தமிழன்


Leave a Reply

%d bloggers like this: