வருமான வரித் துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு!

வருமான வரித் துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு!

வருமான வரித் துறையில் வரி உதவியாளர், மல்டி டாஸ்க்கிங் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 காலிப் பணியிடங்கள் நிரப்ப விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுடன் விருப்பமுள்ள விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கவும்.

நிர்வாகம் : வருமான வரித்துறை

மொத்த காலிப் பணியிடங்கள் : 20

பணி மற்றும் பணியிட விவரங்கள்:

பணி : வரி உதவியாளர் – 02

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், ஒரு மணி நேரத்திற்குள் 8000 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 09.09.2019 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பணி : மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப்- 18

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டுத் தகுதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

வயது வரம்பு : 09.09.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : https://www.incometaxindia.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தின்படி விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 09.09.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.incometaxindia.gov.in/news/recruitment_tax_assistant_mts_kolkata_29_7_19.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.Leave a Reply

%d bloggers like this: