வரத்துவாரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு.

வரத்துவாரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு.

அரியலூர் மாவட்டம், செந்துறையில் உள்ளது பெரிய ஏரி. சுமார் 200 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியில் தற்போது ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஏரியின் கரைகள் மட்டுமே பலப்படுத்த பட்டு வந்தது. இந்த நிலையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் இந்த ஏரியின் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இந்த ஏரிக்கு வரும் நீர்வரத்து வாரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அளவீடு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் அகற்றுவோம் என்றனர். அப்போது பேசிய கலெக்டர் ஏரிக்கரையை பலப்படுத்தினால் மட்டும் ஏரிக்கு தண்ணீர் வராது. வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தான் ஏரி நிரம்பும். ஆகையால் ஏரிக்கு வரும் நீர் வரத்து வாரியில் உள்ள ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றிவிட்டு அறிக்கை தாருங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து தளவாய் பகுதியில் நடைபெறும் திட்டப்பணிகளை பார்வையிட சென்றார். கலெக்டரின் இந்த அதிரடி உத்தரவு, அதிகாரிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வளைகுடா செய்திகள்
Perambalur Classifieds

தினத்தந்தி
Leave a Reply

%d bloggers like this: