தமிழக வனத்துறையில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில்  வேலை!

தமிழக வனத்துறையில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில்  வேலை!

தமிழக வனத் துறையில் காலியாக உள்ள 564 வனக் காவலர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக வனத் துறையில் காலியாக உள்ள 564 வனக் காவலர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதில், 99 பணியிடங்கள் குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.16,600 முதல் ரூ.52,400 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விபரங்களை அறிய www.forests.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் பார்க்கவும்.

18total visits,2visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: