தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்., 20ல் துவங்கும்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்., 20ல் துவங்கும்


தென்மேற்கு பருவமழை ஓரிரு நாட்களில் விடைபெறும் நிலையில், அக்., 20 முதல் வடகிழக்கு பருவ மழை துவங்கும் என, வேளாண் பல்கலை பயிர் மேலாண்மை இயக்கக இயக்குனர் கீதா லட்சுமி தெரிவித்தார்.

தமிழகத்தில், ஜூன் மாதம் முதல் செப்., வரை தென்மேற்கு பருவ மழை; அக்., முதல் டிச., வரை வடகிழக்கு பருவமழை காலமாக உள்ளது. தென்மேற்கு பருவ மழையை பொறுத்தவரையில் எதிர்பார்க்கப்பட்ட மழையை காட்டிலும், 50 சதவீதம் கோவையில் கூடுதலாகவே பதிவாகியுள்ளது.ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை விடைபெற்று, வடகிழக்கு பருவ மழை துவங்கவுள்ளது. இந்நிலையில், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆய்வு மையம் சார்பில், பருவமழை கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பயிர் மேலாண்மை இயக்கக இயக்குனர் கீதா லட்சுமி கூறியதாவது:தென் மேற்கு பருவமழையை பொறுத்தவரையில், நான்கு மாதங்களில் கோவையில், 18 மழை நாட்களில் 308 மி.மீ., மழை கிடைத்துள்ளது. ஆக., 9ம் தேதி, ஒரே நாளில் மட்டுமே, 130 மி.மீ., மழை கிடைத்தது. அதன் படி, நடப்பாண்டில் தென் மேற்கு பருவமழை, 50 சதவீதம் அதிகமாகவே பெற்றுள்ளோம்.தென்மேற்கு பருவ காற்று ஓரிரு நாட்களில் வடகிழக்காக மாறிவிடும்.

வடகிழக்கு பருவமழை, அக்., 20 முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவையில், அக்., மாதம் 146 மி.மீ., மழையும், நவ., மாதம் 118 மி.மீ., டிச., மாதம் 41 மி.மீ., மழையும் எதிர்பார்க்கின்றோம். மூன்று மாதங்களில், 19 மழை நாட்களில், 305 மி.மீ., மழை கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

எதிர்பார்ப்பு என்ன? தமிழகத்தில் எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழை:

மாவட்டம் – எதிர்பார்க்கப்படும் மழை அளவு (மி.மீ.,)
1. அரியலுார் – 544
2. சென்னை –788
3. கோவை – 328
4.கடலுார் – 696
5. தர்மபுரி – 329
6. திண்டுக்கல் 435
7. ஈரோடு – 314
8. காஞ்சிபுரம் – 640
9. கன்னியாகுமரி 495
10. கரூர் -314
11. கிருஷ்ணகிரி – 289
12. மதுரை – 418
13.நாகப்பட்டிணம் 937
14. நாமக்கல் – 291
15. பெரம்பலுார் – 440
16. புதுக்கோட்டை 404
17. ராமநாதபுரம் – 490
18. சேலம் – 369
19. சிவகங்கை 421
20. தஞ்சாவூர் – 549
21. நீலகிரி 476
22. தேனி – 357
23. திருநெல்வேலி 465
24.திருவள்ளூர் 588
25. திருவண்ணாமலை 445
26. திருவாரூர் – 717
27. திருப்பூர் – 314
28. திருச்சி – 390
29. துாத்துக்குடி 425
30. வேலுார் – 348
31. விழுப்புரம் – 498
32. விருதுநகர் – 418
Leave a Reply

%d bloggers like this: