3வது முறையாக இலவச லேப்டாப் கேட்டு அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சாலை மறியல்.

3வது முறையாக இலவச லேப்டாப் கேட்டு அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சாலை மறியல்.


தமிழகஅரசின் இலவச லேப்டாப் கேட்டு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவ, மாணவியர் நூற்றுக்கணக்கானோர் 3வது முறையாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017-2018ம் ஆண்டு பிளஸ்2 படித்த மாணவ, மாணவியர் 431பேரில் நீட் தேர்வெழுதிய 45பேருக்கு மட்டும் லேப்டாப் வழங்கப்பட்டது. மீதமுள்ள 386பேருக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. அதேபோல், 2018-2019ம் ஆண்டு பிளஸ்2 படித்த மாணவ,மாணவியர் 292பேருக்கு லேப்டாப் இன்னும் வழங்கப்படவில்லை. இதன்படி கடந்த 2ஆண்டுகளாக மார்ச் பொதுத்தேர்வு எழுதி முடித்துச்சென்ற 678 பேருக்கு தமிழகஅரசின் இலவச லேப் டாப் வழங்கப்படாத நிலையில், 2019-2020ல் பிளஸ்2 மற்றும் பிளஸ்1 படித்துவரும் மாணவ,மாணவியருக்கு வழங்குவதற்காக இலவச லேப்டாப் வந்திறங்கிய தகவலறிந்த முன்னாள் மாணவ,மாணவியர் கடந்த ஜூன்26ம்தேதி பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டு சாலைமறியலிலும் ஈடுபட்டனர். அப்போது பள்ளித் தலை மைஆசிரியர், இலவச லேப்டாப் விரைந்து பெற்றுத் தருவதாகக்கூறி மாணவ, மாணவி யரை அனுப்பி வைத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 6ம்தேதி பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளிவளாகத் தில் 2019-2020ம் கல்வியாண்டில் கல்விபயிலும் 15பள்ளிகளைசேர்ந்த பிளஸ்2,பிளஸ்1 மாணவ, மாணவியருக்கு தமிழகஅரசின் இலவச லேப்டாப் வழங்கும்விழா கலெக்டர் சாந்தா தலைமையில் நடப்பதையறிந்து முன்னாள் மாணவ,மாணவியர் 200க்கும் மேற் பட்டோர் திரண்டுவந்து பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனையறிந்த பெரம்பலூர் போலீஸார்அவர்களை மிரட்டியும், விரட்டியும் அங்கிருந்து கலைந்து செல்ல செய்தனர். இதனால் தமிழகஅரசுக்கு எதிராகக் கோஷமிட்டவாறு, அரசுத் தலைமை மருத்துவமனை, பழைய பஸ்டாண்டு, சங்குப்பேட்டை வழியாக பாலக்கரை வரை 2கிலோ மீட்டர் தூரம் நடந்துசென்று அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பெரம்ப லூர் இன்ஸ்பெக்டர் அழகேசன், வேப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் குழந்தைராஜன் ஆகியோர் 3நாட்களில் தமிழகஅரசின் இலவச லேப்டாப் பெற்றுத்தர வேண்டுமென கோரப்பட்ட மாணவர்களின்மனுவில் கையெழுத்துப்போட்டதால் முன்னாள் மாணவர் களின் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் நேற்று(9ம்தேதி), 6ம்தேதி மாவட்டக் கல்விஅலுவலர் கையெழுத்துப்போட்டு தெரிவித்தபடி 3நாளாகியதால் லேப்டாப் வழங் கக் கோரி தலைமைஆசிரியரைக் கேட்டுள்ளனர். அவர் இன்னமும் வரவில்லை, வந் தால் தருகிறேன் எனக்கூறியதைத் தொடர்ந்து ஆத்திரமுற்ற மாணவ, மாணவியர் 3வது முறையாக நேற்று பாலக்கரைக்குச் சென்று மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து அங்கு வந்த பெரம்பலூர் மாவட்டக் கல்விஅலுவலர் மாரிமீனாள், டிஎஸ்பி ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி லேப்டாப் வந்தவுடன் வழங்குவதாகக்கூறி சமாதானம் செய்துஅனுப்பினர். இதனால் ஒரு மணிநேரம் பாலக்கரையில் ஒருவழிப்பாதையாக போக்குவரத்து இயக்கப்பட்டது.

தினகரன்

மேலும் மாவட்ட செய்திகள் வாசிக்க – பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
 
Leave a Reply

%d bloggers like this: