லாரி மீது மோதிய கார்

சின்னாறு அருகே லாரி மீது மோதிய கார் பாலத்தில் இருந்து விழுந்தது

532

சின்னாறு அருகே லாரி மீது மோதிய கார் பாலத்தில் இருந்து விழுந்தது.

லாரி மீது மோதிய கார் பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா திருமாந்துறையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(வயது 33). இவரும், வேப்பந்தட்டை தாலுகா சின்னாறு கிராமத்தை சேர்ந்த கலியபெருமாளும்(43) ஒரு காரில் சின்னாறில் இருந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் தொழுதூர் நோக்கி சென்றனர்.

சின்னாறு பாலத்தில் சென்றபோது முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி மீது கார் மோதியதில், கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிந்து லாரி டிரைவர் திண்டுக்கல் மாவட்டம் அதிரணம்பட்டியை சேர்ந்த சரவணகுமாரை(26) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

Facebook
%d bloggers like this: